ஆப்நகரம்

7 பேரை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை: கருணாநிதி வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

TNN 3 Mar 2016, 9:52 am
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil karunanidhi urges centre to take urgent action on release of rajiv murderes
7 பேரை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை: கருணாநிதி வலியுறுத்தல்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

25 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்!https://t.co/7v40Fw90Yb— KalaignarKarunanidhi (@kalaignar89) March 3, 2016

கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் இந்த ஏழு பேரும், ஏறத்தாழ இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை தமிழக அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையால் இவர்களது விடுதலை தள்ளிப்போனது. தற்போது, தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி