ஆப்நகரம்

மக்களின் தேவைகள் நிறைவேற்ற உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் : கருணாநிதி

சென்னை : முதல்வர் உடல்நலம் பெற்று திரும்புவரை , தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட உரிய ஏற்பாடுகள் மத்திய அரசும், தமிழக ஆளுநரும் எடுக்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

TNN 11 Oct 2016, 1:14 pm
சென்னை : முதல்வர் உடல்நலம் பெற்று திரும்புவரை , தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட உரிய ஏற்பாடுகளை மத்திய அரசும், தமிழக ஆளுநரும் எடுக்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil karunanithi argues alternate for people needs
மக்களின் தேவைகள் நிறைவேற்ற உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் : கருணாநிதி



இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இரண்டொரு நாட்களில் இல்லம் திரும்பி விடுவார் என்று கூறப்பட்ட முதலமைச்சரின் உடல் நிலையில் அன்றாடம் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அவர் முழு நலம் பெற்று இல்லம் திரும்பி முதலமைச்சர் பணிகளை ஆற்ற இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை கூறுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரிப் பிரச்சனை போன்ற மிக முக்கியமான பிரச்சனையில் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையிலே இருக்கின்ற காரணத்தால்,அவரிடம் கலந்து கொள்ளாமல், எந்த முடிவும் எடுக்க அமைச்சர்களோ, தலைமைச் செயலாளரோ தயாராக இல்லாத காரணத்தால், ஒரு செயலற்ற நிலைமை தான் தமிழகத்திலே உள்ளது.இதுபற்றி மத்திய அரசோ, தமிழக ஆளுநரோ முடிவெடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பது தான் தமிழ் நாட்டு மக்களின் விருப்பம்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று தன்னுடைய பணியினை தொடர்கின்ற வரையில், தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட உரிய ஏற்பாடுகள் முறைப்படி, சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள், நாட்டு மக்களின் வேண்டுகோள் என திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி