ஆப்நகரம்

கருணாநிதி இரண்டு அல்லது மூன்று தினங்களில் வீடு திரும்புவார்: துரைமுருகன்!

திமுக தலைவர் கருணாநிதி இரண்டு அல்லது மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Aug 2018, 11:09 am
திமுக தலைவர் கருணாநிதி இரண்டு அல்லது மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil VEPV
கருணாநிதி இரண்டு அல்லது மூன்று தினங்களில் வீடு திரும்புவார்: துரைமுருகன்!


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி, இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கலைஞரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் நாம் சொல்ல வருவதை அவரால் கேட்க முடிவதாகவும், ஆபத்தான காலகட்டத்தை கடந்து அவரது உடல் நிலை முன்னேறி வருவதாகவும் கூறிய அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து கலைஞர் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.

அடுத்த செய்தி