ஆப்நகரம்

அம்மா வழிவந்த சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும்: கருணாஸ்

அம்மா வழிவந்த சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TNN 11 Dec 2016, 4:52 pm
சென்னை: அம்மா வழிவந்த சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil karunas asked chinnamma to lead admk party general secretary
அம்மா வழிவந்த சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும்: கருணாஸ்


தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 5ஆம் தேதி காலமானார். இதையடுத்து புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இதற்கிடையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான நடிகர் கருணாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அம்மா வழிவந்தவர் சசிகலா என்றும், விரைவில் அவர் அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதிமுகவையும், அதன் தொண்டர்களையும், தமிழக மக்களையும் காக்க சசிகலா முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ், கடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றிப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Karunas asked Chinnamma to lead ADMK party General secretary.

அடுத்த செய்தி