ஆப்நகரம்

6 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்குப் பட்டா.! வட்டாட்சியருக்கு செக் வைத்த கரூர் கலெக்டர்..

கரூரில் அரசுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலப்பரப்பைத் தனி நபர் ஒருவருக்குப் பட்டா போட்டுக் கொடுத்த வட்டாட்சியரை மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 19 Sep 2019, 5:07 pm
கரூர் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான 6.75 ஏக்கர் நிலத்தைச் சமீபத்தில்தான் அரசு அதைக் கையகப்படுத்தியுள்ளது. மேலும் இதற்காக நில உரிமையாளருக்கு 5.14 கோடி இழப்பீடும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடத்தின் பழைய உரிமையாளருக்கு அப்பகுதி தாசில்தார் அமுதா பட்டா வழங்கியிருக்கிறார்.
Samayam Tamil Untitled (1)


இந்த முறைகேட்டைக் குறித்து நிர்வாகிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை சில நாட்களாக நடந்துள்ளது. இந்நிலையில் தாசில்தார் அமுதா பட்டாவை முறைகேடாக வழங்கியது தெரியவந்துள்ளது.

இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அமுதாவைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த சுற்றறிக்கையை வாங்க மறுத்த அமுதா நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு நிலத்தைத் தனிநபருக்குப் பட்டா போட்டுக் கொடுத்த குற்றச் செயலையடுத்து தாசில்தார் அமுதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்காக அவர் லஞ்சம் ஏதும் வாங்கியுள்ளாரா? இந்த சம்பவத்தில் மற்ற அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி