ஆப்நகரம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்குகிறது.

Samayam Tamil 23 Feb 2018, 9:00 am
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்குகிறது.
Samayam Tamil katchatheevu antony temple festival starts today
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்


ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால், 1913-ம் ஆண்டு, கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறுகிறது.

இலங்கையில் 1983-ம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப் பட்டது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்குகிறது. இன்று இரவு சிலுவைப்பாடு நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி