ஆப்நகரம்

ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிந்ததால் பற்றி எரியும் தீ: பதற்றத்தில் மக்கள்

தஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததால் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 30 Jun 2017, 7:02 pm
தஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததால் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil kathiramangalam village people protest against ongc
ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிந்ததால் பற்றி எரியும் தீ: பதற்றத்தில் மக்கள்


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விளை நிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி குழாய் அமைப்பதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதனை கண்டு கொள்ளாமல் கடந்த 1ம் தேதி ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய் அமைக்கும் பணியை மேற்கொண்டது.

இந்நிலையில், கதிராமங்கலம் – பந்தநல்லூர் இடையே ஓஎன்சிஜி குழாயில் இன்று திடீரென்று வெட்டிப்பு ஏற்பட்டு அதிலிருந்து எண்ணெய் கசிவு கச்சா எண்ணெய் வெளியேறியது.

இதன் காரணமாக, விளை நிலங்களில் கச்சா எண்ணெய் பரவி வருவதால் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்று மக்கள் தெரிவித்து வந்தனர். மேலும், எந்தவித அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி குழாய்களை அகற்றுமாறு கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை முதலே அப்பகுதியில் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும், அதிகாரிகள் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை. இதையடுத்து போராட்டத்தை கலைக்க வந்த போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில், எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து திடீரென்று தீ பரவியுள்ளது. இதனையறிந்த போலீசார் பச்சை செடிகளைக் கொண்டு தீயை அணைத்தனர். தற்போது அப்பகுதி முழுவதும் கலவரம் நிறைந்த இடமாக காணப்படுகிறது.

அடுத்த செய்தி