ஆப்நகரம்

கேரளாவிற்கு ரூ. 5 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்க ஆணை பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Samayam Tamil 9 Aug 2018, 8:31 pm
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்க ஆணை பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Samayam Tamil 201703191040571943_People-watching-activities-of-Opposition-warns-Palanisamy_SECVPF
கேரளாவிற்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவிப்பு


தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால், கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. தவிர, பல்வேறு பகுதிகள் ஏற்பட்ட கனமழை பாதிப்பால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும், மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள அரசு கேட்டுக்கொண்டால், வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அதற்கான ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி