ஆப்நகரம்

கணவனுடன் பழனிக்கு வந்த கேரளா பெண் கூட்டு பலாத்காரம்: வலுக்கும் கண்டனங்கள்

பழனியில் கேரளா பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2021, 5:08 pm
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் பழனியில் உள்ள ஒரு லாட்ஜில் சில நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கேரள போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், பழனியில் இதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை என்று தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்


பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில், கடந்த ஜூன் 19ம் தேதி நானும், கணவரும் பழனிக்கு சென்றோம். அங்குள்ள விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தோம். பழனி பேருந்து நிலையத்தில் இறங்கி விடுதியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் என்னை பின்தொடர்ந்து வந்தனர். பின்னர் ஒரு விடுதியின் அறையில் பூட்டி வைத்து இரவு முழுவதும் பலாத்காரம் செய்தனர்'' என கூறியுள்ளார். இதுதொடர்பாக பழனி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவத்துக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் பதிவு:

பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன!

அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான். இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்!

பழனிக்கு வந்த கேரளா பெண் கூட்டு பலாத்காரம்: லாட்ஜில் கணவன் முன்பு நடந்த கொடூரம்

தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்!

என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி