ஆப்நகரம்

ஈஷா மையத்தின் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்; புதுவையிலும் நடத்த கிரண் பேடி ஆர்வம்

ஈஷா மையம் கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்திவரும் விளையாட்டுப் போட்டிகளைப் போன்று, புதுச்சேரியிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

TNN 4 Sep 2016, 10:39 pm
ஈஷா மையம் கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்திவரும் விளையாட்டுப் போட்டிகளைப் போன்று, புதுச்சேரியிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kiran bedi gets a swasth idea in coimbatore to introduce it in puducherry
ஈஷா மையத்தின் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்; புதுவையிலும் நடத்த கிரண் பேடி ஆர்வம்


ஈஷா யோகா மையம், ஆண்டுதோறும் கோவையில் கிராமோத்சவம் என்ற பெயரில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்திவருகிறது. ஒருமாதம் முழுவதும் நடைபெறும் இப்போட்டிகளில், தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த 12 ஆண்டுகளாக, இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, நடப்பாண்டிற்கான கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கின. கோவை கொடீசியா மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியின் தொடக்க விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, மத்திய அமைச்சரும், விளையாட்டு வீரருமான ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய கிரண்பேடி, ஈஷா மையத்தின் கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளை, புதுச்சேரியிலும் நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார். விரைவில் இதனை செயல்படுத்தி, புதுவை இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோன்று, மத்திய அமைச்சர் ராஜயவர்த்தன் சிங் ரத்தோர் பேசுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்தால் மட்டும் அவர்களை கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, உள்ளூர் போட்டிகளில் வெற்றிபெறுவோரையும் கவுரவிக்க வேண்டும் என்றார். அவ்வாறு செய்தால்தான், விளையாட்டு மீது பலருக்கும் ஆர்வம் உண்டாகும் என்றும் அவர் கூறினார்.

ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசுகையில், தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள விளையாட்டுகளை பாதுகாக்கும் வகையிலேயே, இந்த கிராமோத்சவம் போட்டிகளை நடத்திவருவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி