ஆப்நகரம்

புதுச்சேரியிலும் கைவரிசையை காட்டும் பீட்டா..!

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள லட்சுமி என்ற யானை துன்புறுத்தப்பட்டு வருவதாக அம்மாநில ஆளுநருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

TNN 25 Jan 2017, 8:08 pm
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள லட்சுமி என்ற யானை துன்புறுத்தப்பட்டு வருவதாக அம்மாநில ஆளுநருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
Samayam Tamil kiran bedi ordered to release puducherry temple elephant lakshmi
புதுச்சேரியிலும் கைவரிசையை காட்டும் பீட்டா..!


காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி,உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை பெற்ற பீட்டா அமைப்பு தமிழகத்தில் நடைபெற்ற தன்னெழுச்சிப் போராட்டத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டது.இந்நிலையில் தற்போது தனது பார்வையை புதுச்சேரி மாநிலம் பக்கம் திருப்பியுள்ளது பீட்டா.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த யானை சங்கிலியில் கட்டப்பட்டு,உடலளவில் துன்புறுத்தப்பட்டு வருவதாக பீட்டா அமைப்பு சமீபத்தில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்த கடிதத்தை பரிசீலித்த கிரண் பேடி,லட்சுமி யானையை காட்டில் விட வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.கிரண் பேடியின் இந்த உத்தரவுக்கு,புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் கிரண் பேடியின் இந்த உத்தரவுக்கு ஒரு மனதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கிரண் பேடியின் இந்த உத்தரவு குறித்து தகுந்த கோப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.

Kiran Bedi ordered to release Puducherry Temple Elephant Lakshmi

அடுத்த செய்தி