ஆப்நகரம்

அரசின் அனுமதியில்லாமல் கிரண்பேடியால் மேல்முறையீடு செய்ய முடியாது- நாராயணசாமி

சில ஆண்டுகளாகவே புதுசேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு மத்தியில் கடும் சொற்போர் மற்றும் மாற்று கருத்துகள் நிலவி வருகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசின் அனுமதியில்லாமல் மேல்முறையீடு செய்ய முடியாது என்ற அவர், அதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்காது என்று தெரிவித்தார் முதல்- அமைச்சர் நாராயணசாமி.

Samayam Tamil 4 May 2019, 3:19 pm
சில ஆண்டுகளாகவே புதுசேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு மத்தியில் கடும் சொற்போர் மற்றும் மாற்று கருத்துகள் நிலவி வருகிறது.
Samayam Tamil kiranbedi2


கவர்னர் கிரண்பேடி தனது அதிகார வரம்பை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறார் என முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.

யூனியன் பிரதேசமான புதுவையின் நிர்வாகியான தனக்கே முழு அதிகாரம் உள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து கூறி வந்தார். இதனால் இந்த மோதலுக்கு முடிவே ஏற்படவில்லை.

இந்த நிலையில் டெல்லி ஆம் ஆத்மி கட்சி முதல்- அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் யூனியன் பிரதேச கவர்னர்களின் அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் இனி இடையூறு அளிக்க கூடாது என்று கூறினார்.

இதனை எதிர்த்து தற்போது கிரண்பேடி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசின் அனுமதியில்லாமல் மேல்முறையீடு செய்ய முடியாது என்ற அவர், அதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்காது என்று தெரிவித்தார்.

கிரண்பேடி சொந்தப் பெயரில் சொந்தச் செலவில் மட்டும் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடியில் வெற்றிபெறுவது சந்தேகம்தான் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி