ஆப்நகரம்

சூப்பர் மூன் - ஐ கண்டு ரசித்த கொடைக்கானல்வாசிகள்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மாசி மாத பௌணர்மி தினத்தினையொட்டி பூமிக்கு அருகில் பெரிய அளவில் தெரிந்த சந்திரனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

Samayam Tamil 20 Feb 2019, 10:21 am
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மாசி மாத பௌணர்மி தினத்தினையொட்டி பூமிக்கு அருகில் பெரிய அளவில் தெரிந்த சந்திரனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். பெளணர்மி நாளில் சந்திரன் முழு நிலாவாக காட்சி அளிக்கும். ஆனால் மாசி மாதத்தில் தெரியும் சந்திரன் அளவில் பெரியதாகவும் அதிக ஒளியை தருவதாகவும் இருந்தது. இதன்படி இன்று மாலை தோன்றிய பெரிய சந்திரனை கொடைக்கானல் கோக்கர்ஸ்வால்க் பகுதியில் கண்ட பொதுமக்கள் பெரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
Samayam Tamil supermoon-reuters_650x400_51517389716


இது குறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி வான்இயல் ஆராய்சி மைய விஞ்ஞானி செல்வேந்திரன் கூறியபோது, 'சந்திரன் பூமியில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இன்று மாசிமாத பெளணர்மி தினத்தில் பூமிக்கு அருகில் வந்தது. இது வழக்கமான தூரத்தில் இருந்து 5 ஆயிரத்து 154 கிலோ மீட்டர் அருகில் வந்துள்ளது, இதனால் அதன் ஒளி அளவு 38 சதவீதம் அதிகரித்து இருந்ததுடன் அதன் அளவு 14 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது, வழக்கமான பெளணர்மியை விட இந்த பெளர்ணமியில் அதிக ஒளி மற்றும் பெரிய அளவில் சந்திரன் தெரிந்ததாகவும் தெரிவித்தார்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அவ்வப்போது மேகக்கூட்டங்களுக்கு நடுவில் தெரிந்த சந்திரனை பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்

அடுத்த செய்தி