ஆப்நகரம்

என் தந்தைக்கு பரோல் கொடுங்க - கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷா மகள்!

குண்டுவெடிப்பில் குற்றவாளியான பாட்ஷாவிற்கு பரோல் கேட்டு, அவரது மகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Samayam Tamil 24 Apr 2019, 8:33 pm
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Basha


கடந்த 1998ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த 20 ஆண்டுகளாக அல் - உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவுக்கு ஆயுள் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி, அவரது மகள் முபீனா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சிறையில் உதவியாளர் இல்லாமல் எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலையில் தனது தந்தை இருக்கிறார்.

அவரை சரியாகக் கவனித்து சிகிச்சை வழங்கவும், குடும்ப விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கவும் பரோல் வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனுவை நீதிபதி சத்தியநாரயணன், நீதிபதி நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அவர்கள், இந்த வழக்கு தொடர்பாக வரும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி