ஆப்நகரம்

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோவையில் மறுமணம்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு காதல் கணவரை இழந்த கௌசல்யா கோவையில் இன்று திராவிடா் முறைப்படி மறுமணம் செய்து கொண்டாா்.

Samayam Tamil 9 Dec 2018, 10:06 pm
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு காதல் கணவரை இழந்த கௌசல்யா கோவையில் இன்று திராவிடா் முறைப்படி மறுமணம் செய்து கொண்டாா்.
Samayam Tamil Kowsalya Marriage 1


திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த சங்கா், கௌசல்யா தம்பதி பல்வேறு எதிா்ப்புகளைக் கடந்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனா். ஆனால், சாதியத்தின் கொடுமையால் காதல் தம்பதியரை கௌசல்யாவின் உறவினா்களே கொலைவெறியுடன் தாக்கினா். இதில் சங்கா் உயிரிழந்தாா். கௌசல்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தாா்.

அதனைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் சாதி மறுப்பு தொடா்பான அழுத்தமான கருத்துகளை பதிவு செய்து வந்தாா். மேலும் தனது காதல் கணவரை சாதியை காரணம் காட்டி கொடூரமாக கொலை செய்த உறவினா்கள் உள்பட தன் பெற்றோருக்கே சட்டப்போராட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தந்தவா்.

Read In Telugu

இந்நிலையில், இன்று கோவை பெரியாா் படிப்பகத்தில் நெருங்கிய நண்பா்கள் மத்தியில் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. கௌசல்யா “நிமிா்பு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளா் சக்தியை திருமணம் செய்து கொண்டாா். சக்தியிடம் தான் கௌசல்யா பறை இசையை கற்றாா்.



இந்த திருமணத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் நிறுவனா் கொளத்தூா் மணி, தந்தை பெரியாா் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளா் ராம கிருஷ்ணன், வன்னி அரசு மற்றும் பத்திாிகையாளா் எவிடனஸ் கதிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தம்பதியா் இருவரும் உறுதிமொழி ஏற்று தங்களின் வாழ்க்கையை தொடங்கினா்.

அடுத்த செய்தி