ஆப்நகரம்

சமயபுரம் , திருவண்ணாமலை கோயில்களில் கும்பாபிஷேகம்

திருச்சி சமயபுர மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது.

TOI Contributor 6 Feb 2017, 8:38 am
திருச்சி : திருச்சி சமயபுர மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது.
Samayam Tamil kumbabhishekam samayapuram mariamman temple
சமயபுரம் , திருவண்ணாமலை கோயில்களில் கும்பாபிஷேகம்


அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. 6 மணிக்கு யாக சாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் குடங்கள் எடுத்து செல்லப்பட்டது. காலை 7.10 முதல் 7.20க்குள் மாரியம்மன் தங்க விமானம், மேற்கு, வடக்கு, தெற்கு கோபுரங்கள், பரிவார விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

பக்தர்களின் வசதிக்காக புனித நீர் 42 இடங்களில் தெளிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் சமயபுரத்தில் கட்டணமின்றி தரிசனம் செய்யலாம். கும்பாபிஷேகத்திற்கு முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றதால், 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,
இதே போல திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சுமார் 1,400 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது. கடந்த 2ம் தேதி அண்ணாமலையார் கோயில் உட்பிரகாரங்களில் உள்ள பரிவாரமூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இன்று உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேகம் அதிகாலை 3 மணிக்கு 12ம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. காலை 9.15 மணி அளவில், ராஜகோபுரம், கருவறை, விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 10.05 மணி அளவில் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 1,600 சிறப்பு பஸ்கள், 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

A large number of devotees witnessed the kumbabhishekam of the Samayapuram Sri Mariamman temple near Tiruchi, on Monday. 60 words

அடுத்த செய்தி