ஆப்நகரம்

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் தேரோட்டம்

108 வைணவ தலங்களில் மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் ஸ்ரீ சங்கரமண பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

Samayam Tamil 15 Jan 2019, 4:28 pm
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இத்தலத்தை திருமழிசைஆழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி அளித்துள்ளதாக கூறுப்படுகிறது. அவரது வேண்டுகோளின்படி இங்கு உத்தானசாயி கோலத்தில் சாரங்கபாணிசுவாமி என்னும் ஆராவமுதன் அருள் பாலிக்கிறார்.
Samayam Tamil கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் தேரோட்டம்
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் தேரோட்டம்


தாயார் கோமளவல்லி, பெரியாழ்வார் , பேயாழ்வார், பூதத்தாழ்வார் , நம்மாழ்வார், ஆண்டாள் , திருமழிசையாழ்வார் , திருமங்கையாழ்வார் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதி அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படுகிறது. இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணிசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சங்கரமண பிரம்மோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அது போல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.விழாவின் 9ம் நாளான இன்று மகர சங்கராந்தி எனும் தைப்பொங்கல் திருநாளையொட்டி, நாச்சியார்களுடன் பெருமாள் தேருக்கு எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, தேரில் உலா வந்து சுவாமிகளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 12 மணி அளவில் உத்தராயண வாயில் திறப்பும் அதையடுத்து நாளை 16ஆம் தேதி 10ம் நாள் விழாவாக பெருமாள் திருவடி திருமஞ்சனத்துடன் இவ்வாண்டிற்கான சங்கரமண பிரமோற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி