ஆப்நகரம்

தமிழக காங்கிரஸ் தலைவருக்கு குஷ்பு வாழ்த்து

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து, நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்தார்.

TOI Contributor 21 Sep 2016, 6:41 pm
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து, நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்தார்.
Samayam Tamil kushboo greets tn congress leader thirunavukkarasar
தமிழக காங்கிரஸ் தலைவருக்கு குஷ்பு வாழ்த்து


சமீபத்தில் நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 40க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்டு, 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்த தோல்வி அதிர்ச்சி அளிப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்தார்.

இதையடுத்து, புதிய தலைவரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரை காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசரை நியமித்து, அக்கட்சி மேலிடம் அறிவித்தது.

கோஷ்டிப் பூசல் இன்றி, காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பாடுபடுவேன் என்று, திருநாவுக்கரசர் உறுதி அளித்தார். அவருக்குப் பலரும் வாழ்த்து கூறிவரும் நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு இன்று திருநாவுக்கரசை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த செய்தி