ஆப்நகரம்

எடப்பாடியை தேடிச் சென்ற பாஜக தலைவர்கள்: புதிய ஆளுநரிடம் சொன்னது என்ன?

எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் முன்னாள், இந்நாள் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். புதிய ஆளுநரையும் சந்தித்துள்ளனர்.

Samayam Tamil 18 Sep 2021, 9:20 am
உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போல் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேட்பாளர்களின் செல்வாக்கைப் பொறுத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
Samayam Tamil edappadi palanisamy


ஆனாலும் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகி தனித்து தேர்தலைச் சந்தித்திருப்பது அக்கூட்டணிக்குள் புகைச்சல் இருப்பதையே காட்டுகிறது என்கிறார்கள். பாமக மட்டுமே விலகியுள்ள மற்றபடி பிற கட்சிகள் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறிய நிலையில் தங்களுக்கு அதிக முக்கியத்துவமும் இடங்களும் வழங்கப்பட வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்படுகிறதாம். இந்த சூழலில்தான் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும், இணை அமைச்சருமான எல்.முருகனும், தற்போதைய தலைவர் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு - அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல், புதிய ஆளுநர் நியமனம், என பல்வேறு விஷயங்களை இந்த சந்திப்பில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் இருவரும் புதிய ஆளுநராக பதவியேற்கும் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் குறித்து இருவரும் புதிய ஆளுநரிடம் எடுத்துக்கூறியதாக தெரிகிறது.
இனி ‘டாக்டர்’ அன்பில் மகேஷ்: படிக்க கிளம்பிய அமைச்சர்!
முன்னதாக பாஜக ஹெச்.ராஜா சிவகங்கை மாவட்டம், சாத்தரசங்கோட்டை அருகே உள்ள பெரியகண்ணனூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “ஆளுநரை விமர்சித்து ஊலையிடும் நரிகள் தவறு செய்திருக்கலாம். அழகிரி, திருமாவளவன் உள்ளிட்டோர் ஏதேனும் தவறு செய்திருக்கலாம். அதனால் தான் ஆளுநரை கண்டு அவர்கள்அஞ்சுகின்றனர். அவர்கள் ஆளுநரிடம் ஏதேனும் வேலையை காட்ட நினைத்தால் வாலை ஒட்ட நறுக்குவோம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி