ஆப்நகரம்

தென்னை முறிந்து விழுந்து கூலி தொழிலாளி உடல் நசுங்கி பலி!

கன்னியாகுமரி மாவட்டம் பழையகடை பகுதியில் தென்னை மரம் முறிக்கும் பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மீது தென்னை முறிந்து விழுந்து கை துண்டான நிலையில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி. தக்கலை காவல் நிலைய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 8 Jan 2019, 5:03 pm
கன்னியாகுமரி மாவட்டம் பழையகடை பகுதியில் தென்னை மரம் முறிக்கும் பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மீது தென்னை முறிந்து விழுந்து கை துண்டான நிலையில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி. தக்கலை காவல் நிலைய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பழையகடை பகுதியில் தனியார்ருக்கு சொந்தமான இடத்தில் நின்ற தென்னை மரங்களை முறிக்கும் பணியில் திப்பிரமலை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ்(36) உட்பட நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரமேஷ் மீது தென்னை முறிந்து விழுந்து கை துண்டான நிலையில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் .இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை காவல் நிலைய போலிசார், உடலை கைப்பற்றி உடல்கூர் ஆய்வுக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி