ஆப்நகரம்

கந்துவட்டிக்கு கிட்னியா.?நெசவு தொழிலாளி மீட்பு.!

ஈரோடு அருகே, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் சிறுநீரகத்தை விற்கசொல்லி, மிரட்டி அழைத்து செல்லப்பட்ட நெசவு தொழிலாளி எர்ணாகுளம் மருத்துவமனையில் மீட்கப்பட்டார்.

TNN 24 Oct 2017, 2:05 pm
ஈரோடு அருகே, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் சிறுநீரகத்தை விற்கசொல்லி, மிரட்டி அழைத்து செல்லப்பட்ட நெசவு தொழிலாளி எர்ணாகுளம் மருத்துவமனையில் மீட்கப்பட்டார்.
Samayam Tamil labour rescued in kerala hospital in the problem of loan
கந்துவட்டிக்கு கிட்னியா.?நெசவு தொழிலாளி மீட்பு.!


ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்தவர் ரவி, விசைத்தறித்தொழிலாளியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் கடன் பெற்றுள்ளார். கடனை அடைக்க கடன் வாங்கியதால் 3 லட்சம் ரூபாய் வரை கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து வாங்கிய கடனை திருப்பித்தரும்படி கடன் கொடுத்தவர்கள் ரவிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கடனை அடைப்பதற்காக ரவி பலரிடம் பண உதவி கேட்டுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட அவிநாசியை சேர்ந்த புரோக்கர் ஒருவர் , ரவியை அணுகி சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்து விடலாம் என யோசனை கூறியுள்ளார்.

இதனை ஏற்று, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வி.பி.எஸ். மருத்துவமனைக்கு, கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரவி சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த ரவியின் மனைவி சம்பூர்ணா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரை நேரில் சந்தித்து தனது கணவரை மீட்டு தருமாறு மனு கொடுத்தார்.

இதையடுத்து எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட, ஆட்சியர் பிரபாகர், ரவியை சிறுநீரக விற்பனை கும்பலிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். அதன்படி எர்ணாகுளம் காவல்துறையினர், கூலித் தொழிலாளி ரவியை மீட்டுள்ளனர். வாங்கிய கடனுக்காக கிட்னியை விற்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Labour rescued in kerala hospital in the problem of loan.!

அடுத்த செய்தி