ஆப்நகரம்

நிர்மலாதேவி கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்கள்!

பணி நிரந்தரம் கோரி அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் பெண் ஊழியர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 20 Sep 2018, 12:49 pm
பணி நிரந்தரம் கோரி அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் பெண் ஊழியர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil 8


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. சுயநிதி பிரிவில் 9 ஆண்டுக்கு மேலாக தனலட்சுமி, மகாதேவி, கலைச்செல்வி, சுகஸ்கலா, விஜயகுமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், சமீபத்தில் பணியில் சேர்ந்தவர்களை கல்லூரி செயலர் பணி நிரந்தரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து கடந்த 17ம் தேதி முதல் தனலட்சுமி, மகாதேவி, கலைச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் கல்லூரி முன்பு தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் அழைக்காததால் மனமுடைந்த ஊழியர்கள் 4 பேரும், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக அறிவித்து கல்லூரி மாடிக்கு சென்றனர்.

இதைப்பார்த்த மாணவ, மாணவிகள் மாடிக்குச் சென்று அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக கல்லூரி முதல்வர் (பொ) பாண்டியராஜ் தலைமையில் 1,500 மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி