ஆப்நகரம்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்க வந்த மூதாட்டி ஒருவர், திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 25 Feb 2019, 11:04 pm
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்க வந்த மூதாட்டி ஒருவர், திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மூதாட்டி


தென்காட்சி பகுதியை சேர்ந்த ராசம்மாள் என்கிற மூதாட்டி தனது வீட்டை அபகரித்துச் கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எட்டுக்கப்படவில்லை என கூறி நெல்லை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தார்.

மனு அளிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த அவர், கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அந்த மூதாட்டியை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் கேட்ட போது, என் வீட்டை சிலர் அபகரிக்க முயல்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி, உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து ஆட்சியரிடம் புகார் கொடுத்தேன், அதற்கும் பதிலில்லை.

இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறினார். மேலும், தன்னிடமிருந்த வீட்டை அபகரித்தவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக மூதாட்டி அச்சம் தெரிவித்தார். நியாயம் கிடைக்க வழியில்லை என்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தற்கொலைக்கு முயன்றதாக மூதாட்டி கூறினார்.

விவரங்களை கேட்டறிந்த காவலர்கள், மூதாட்டியின் புகார் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி