ஆப்நகரம்

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : பிடிபட்ட இருவரும் சிறையிலடைப்பு

திருச்சியில் நடந்த லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, ஒரு பெண் உட்பட இருவரை திருச்சி மத்தியச் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்..

Samayam Tamil 5 Oct 2019, 9:49 pm
திருச்சியில் நடந்த லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, ஒரு பெண் உட்பட இருவரை திருச்சி மத்தியச் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்..
Samayam Tamil lalitha jewellery robbery accused jailed in trichy
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : பிடிபட்ட இருவரும் சிறையிலடைப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த, 2ம் தேதி அதிகாலையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடும் சவாலுக்கு பிறகு திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளி சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து, சுமார் 4.8 கிலோ கிராம் தங்கம் நகைகளாக பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், மணிகண்டன், கனகவள்ளி ஆகியோர் இன்று திருச்சி கொண்டு வரப்பட்டனர்.

நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால், திருச்சி மாவட்டம் காஜாமலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் தங்கியிருந்த மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணியின் முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவரையும் வரும், அக்டோபர் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார்.

இதனையடுத்து மணிகண்டன், திருச்சி மத்திய சிறையிலும், கனகவள்ளி,வெங்காயப்பேட்டை பெண்கள் தனி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி