ஆப்நகரம்

நீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த மண்சரிவு!

கனமழை காரணமாக குன்னூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்தில் போலீசார் மாற்றம் செய்துள்ளனர். பொதுமக்கள் பெரும் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 17 Nov 2019, 7:54 am

ஹைலைட்ஸ்:

  • நீலகிரியில் பெய்து வரும் கனமழை
  • நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Landslide
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கல்லாறு, மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எட்டு மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க!

மேலும் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் பேருந்துகள் கோத்தகிரி வழியாக வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஆஜராக மாட்டார்... நாங்க போவோம்: ஆர்.எஸ்.பாரதி

கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 15.8 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், இன்று கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டம், தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? - இரா.முத்தரசன் சந்தேகம்

வரும் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதன் பின்னர் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி