ஆப்நகரம்

பெங்களூரு சிறையருகே தடியடி

சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வந்த நேரத்தில், கூட்டம் அதிகமானதால் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

TNN 15 Feb 2017, 6:05 pm
பெங்களூரு : சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வந்த நேரத்தில், கூட்டம் அதிகமானதால் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
Samayam Tamil lathi charge near in bengaluru jail parappana agrahara
பெங்களூரு சிறையருகே தடியடி


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்க உள்ளனர்.

இதற்காக சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். சசிகலாவைப் பார்ப்பதற்காக அங்கு அதிகளவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூடினர்.

அங்கு வந்த சிலர் அப்பகுதி வழியாக சென்ற சில வாகனங்கள் மீது தக்குதல் நடத்தினர். அதில் சில கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. சில கார்களின் மீது ஏறி அதன் கண்ணாடிகளை உடைத்தனர். அதில் சசிகலாவுக்காக உடைகள் கொண்டு செல்லப்பட்ட வாகனமும் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதையடுத்து, கூட்டத்தை கலைக்க அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது பெங்களூரு போலீஸார் லேசான தடியடி நடத்தப்பட்டது.



சசிகலா, இளவரசி பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணா முன் சரணடைந்துள்ள நிலையில், இன்னும் சில நிமிடங்களில் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இதையடுத்து அங்கு நிலைமை சீராகியுள்ளது.

அடுத்த செய்தி