ஆப்நகரம்

சிறையில் சசிகலா உடல்நிலை எப்படி இருக்கிறது? அவரே எழுதிய கடிதம் - சமயம் தமிழ் எக்ஸ்க்ளூசிவ்!

சிறைத்துறைக்கு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எழுதிய கடிதத்திற்கு கிடைத்துள்ள பதில் கடிதம் குறித்து கிடைத்த பிரத்யேக தகவலை இங்கே காணலாம்.

Samayam Tamil 19 Oct 2020, 5:16 pm
சசிகலா உடல்நிலை குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு சசிகலா அனுப்பிய பதில் கடிதம் கிடைத்துள்ளதாக சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். அதாவது, சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், கோவிட்-19 காரணமாக தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையளிக்கிறது.
Samayam Tamil VK Sasikala


கோவிட்-19 நோய் தொற்றுப் பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும், எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும் பிற மாநில மக்களும் கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு, சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி, சிறைத்துறை எனது நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். உத்தரவு கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி அபராதத் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும்.

வெற்றிவேல் இழப்பு; இனி தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன? டிடிவி தினகரன்!

கர்நாடக நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் 14-2-2017 தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு விஷயத்தில், சட்டப்படியாக குயூரிட்டி மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும்.
sasikala

அதுபற்றி டிடிவி தினகரன் அவர்களுடன் ஆலோசித்து செயல்படவும். நான் வணங்கும் இறைவன் ஆசியோடும் என் உடன் பிறவா அக்காவின் ஆசியோடும் அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி