ஆப்நகரம்

சகாயம் சொக்கத்தங்கம்: கிரானைட் அறிக்கை மீதான சந்தேகத்திற்கு பதிலடி

கிரானைட் முறைகேடு குறித்த தனது அறிக்கையை சந்தேகிப்பது தன் நேர்மையை சந்தேகிப்பதற்கு இணையானது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

TNN 18 Jul 2017, 8:10 pm
கிரானைட் முறைகேடு குறித்த தனது அறிக்கையை சந்தேகிப்பது தன் நேர்மையை சந்தேகிப்பதற்கு இணையானது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil lawyer replies on scandal on sagayams report on granite scam
சகாயம் சொக்கத்தங்கம்: கிரானைட் அறிக்கை மீதான சந்தேகத்திற்கு பதிலடி


தமிழகத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் 1,16,000 கோடி ரூபாய்க்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிரானைட் முறைகேடு விசாரணை குழுவில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரத்துக்கு ஊதியம் வழங்காததை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் சகாயம் குழு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் கிரானைட் அதிபர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் அளித்த்தோடு சகாயம் குழுவின் வேலை நிறைவடைந்துவிட்டது என்றும் சகாயம் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது கிரானைட் முறைகேடு நடக்கவில்லை என்றும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சகாயம் குழு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், சகாயம் அறிக்கையை சந்தேகிப்பது சகாயம் அவர்களின் நேர்மையை சந்தேகிப்பதற்கு இணையானது. என்றார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பிரமணியன், தாசில்தார் மீனாட்சி சுந்தரத்தின் ஊதிய நிலுவை குறித்து அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி