ஆப்நகரம்

வழக்கறிஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

வழக்கறிஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

TNN 6 Oct 2016, 6:49 am
திருவண்ணமலை : பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக வழக்கறிஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil lawyer sentenced 10 years rigorous imprisonment for rape case
வழக்கறிஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!


அய்யம்பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்த அருள்மொழி (30) என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். 23 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து இவருக்கு திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.50,000 வழங்கக்கோரி தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இயல்பாக நீதிமன்றத்திற்கு வெளியே வந்த அருள்மொழி தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். அவர் தப்பிச்சென்றது தெரியவரவே அவர் மீது வழக்குப்பதியப்பட்டது. காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அருள்மொழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி