ஆப்நகரம்

இங்கிலீஷ்காரன் மாதிரி இருக்கக் கூடாது: வெங்கய்யா அறிவுரை

ஆங்கிலம் படிக்கலாம். ஆனால், ஆங்கிலேயராகவே வாழக்கூடாது என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

TNN 17 Oct 2017, 2:43 pm
சென்னை: ஆங்கிலம் படிக்கலாம். ஆனால், ஆங்கிலேயராகவே வாழக்கூடாது என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil learn english but dont live like an english says venkaiah naidu
இங்கிலீஷ்காரன் மாதிரி இருக்கக் கூடாது: வெங்கய்யா அறிவுரை


சென்னையில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வியில் குழந்தைகளை தமிழிலேயே படிக்க வைக்க வேண்டும். தாய், தாய்மொழி, தாய் மண் மூன்றையும் என்றும் யாரும் மறக்கக்கூடாது. மறந்தால் மனிதாக வாழ இயலாது.” என்றார்.

மேலும், “பிற மொழிகளை படிக்கலாம். நான் மற்ற மொழிகளுக்கு எதிரானவன் அல்ல ஆங்கிலம் படியுங்கள். ஆனால் ஆங்கிலேயராக வாழாதீர்கள். என் மகள் நடத்தும் பள்ளியின் வாசலில் உள்ள பலகையில், ‘இங்கு பயிற்றுவிப்பு மொழி ஆங்கிலம். கலாச்சாரம் இந்தியாவுடையது.’ என்று எழுதியுள்ளது. நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.” என்றும் வெங்கய்யா குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி