ஆப்நகரம்

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து: இளம்பெண்ணின் இடது கால் அகற்றம்!!

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த இளம்பெண்ணின் இடது கால் அறுவை சிகிச்சை மூலம் இன்று அகற்றப்பட்டது.

Samayam Tamil 15 Nov 2019, 11:02 pm
கோவை சிங்காநல்லூரில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமணத்தையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil kar


அக்கம்பம் திடீரென சரிந்து விழுவதை கண்ட அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த இளம்பெண் அனுராதா, கொடிகம்பம் தன் மீது விழாமலிருக்க அவசரமாக வண்டியை நிறுத்தியதில் வாகனம் அவர் மீது சரிந்தது. அப்போது பின்னால் வந்த லாரி அவரின் கால்களில் ஏறியது.

இந்த விபத்து குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, 'கொடிக் கம்பம் சம்பவம் குறித்து தமக்குத் தெரியாது. அதே நேரத்தில் கொடி நடக்கூடாது என யாரும் சொல்லவில்லை. மேலும் இதுவரை ரோட்டில் கொடிக் கம்பம் வைக்க தடை என எந்த அறிவிப்பும் வரவில்லை' எனக் கூறி, தமது கட்சிக்கு வக்காலத்து வாங்கினார்.

பேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...

இந்த நிலையில், லாரி ஏறியதால் கடுமையாக சேதமடைந்திருந்த இளம்பெண்ணின் இடது கால் இன்று, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. விபத்தில் படுகாயமடைந்ததால், காலின் ரத்தநாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, வேறு வழியின்றி அவரது இடது கால் அகற்றப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி