ஆப்நகரம்

இடதுசாரி எழுத்தாளர் டி.ஞானையா காலமானார்...!

இடதுசாரி எழுத்தாளர் டி.ஞானையா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

TNN 8 Jul 2017, 6:12 pm
கோவை: இடதுசாரி எழுத்தாளர் டி.ஞானையா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
Samayam Tamil leftist writer gnanaiah passed away
இடதுசாரி எழுத்தாளர் டி.ஞானையா காலமானார்...!


மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் டி.ஞானையா. அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர். பிரிட்டிஷ் ஆதிக்கக் காலத்தில், ஹங்கேரி, அர்மீனியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று தகவல் தொடர்பு துறையில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து அகில இந்திய அஞ்சல், தந்திப் பணியாளர் சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்தார். மேலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயற்குழுவிலும், மாநிலச் செயற்குழுவிலும் செயலாற்றினார். அவர் எழுதிய நூல்களில் சில:

* ’பாகிஸ்தான் பிரிந்தது ஏன்', 'அமெரிக்க பயங்கரவாதம் வரலாற்றுத் தடங்கள்', 'இந்தியா-வரலாறும் அரசியலும்', 'சர்வதேசப் பயங்கரவாதமும் இந்தியப் பயங்கரவாதமும்', 'அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துகளும்', 'இஸ்லாமும் இந்தியாவும்', 'அணு ஆயுத அரசியல்'

கோவை டவுன்ஹால் பகுதியில் வசித்து வந்த அவருக்கு, இதயப் பிரச்சினை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Leftist writer Gnanaiah passed away.

அடுத்த செய்தி