ஆப்நகரம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 11 May 2019, 6:33 pm
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
Samayam Tamil rain

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

கோவை அருகே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கருமத்தம்பட்டியை அடுத்த வாகராயம்பாளையம் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது.

கொடைக்கானல் நகர்பகுதிகளில் பெய்த லேசான மழை காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இங்குள்ள பிரையண்ட் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள், மழையில் நனைந்தவாறு பூங்காவின் எழிலை ரசித்து மகிழ்ந்தனர். இதேபோல் கீழ்மலை, பெருமாள் மலை பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது.

அடுத்த செய்தி