ஆப்நகரம்

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Jul 2019, 12:02 pm
நெல்லை, தூத்துக்குடி, தேனி, கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil rain 1


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலோர தமிழகத்தில் காணப்படும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சில இடங்களில் ஞாயிற்றுக் கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி திருக்கோயிலூர், செஞ்சி ஆகிய இடங்களில் 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூரில் 10 செ.மீ., கிருஷ்ணகிரி, பாரூில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 7 செ.மீ., வேலூரில் 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

அடுத்த செய்தி