ஆப்நகரம்

Chennai Rains: லைட்டா அடிச்சு தூக்கப் போகும் மழை; மீனவர்களுக்கும் எச்சரிக்கை இருக்கு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Dec 2019, 1:15 pm
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நல்ல மழையை அளித்து வருகிறது. வரும் 25ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil Rain7


இன்றைய நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்குமா; முதல்வரிடம் அமித் ஷா சொன்னது என்ன?

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தெற்கு அரபிக்கடலில் சூறைக் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

யாருக்கும் லீவு கிடையாது- திடீர் உத்தரவை வெளியிட்ட மாநகர போக்குவரத்துக் கழகம்!

மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டங்களாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது.

இதனால் நெல்லை, டவுன், மேலப்பாளையம் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பாபநாசம் அணைப் பகுதியில் பெய்த மழையால் நீர்மட்டம் உச்சத்தை எட்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: போராட்டம் நடத்திய பாஜகவினர் 299 பேர் கைது...

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரி கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அடுத்த செய்தி