ஆப்நகரம்

குடித்தபிறகு காரில் இலவசமாக வீட்டிற்கு செல்லலாம்! புதிய திட்டம் அறிமுகம்!!

குடித்தபிறகு காரில் இலவசமாக வீட்டிற்கு செல்லலாம்! புதிய திட்டம் அறிமுகம்!!

TOI Contributor 20 Oct 2016, 4:36 pm
குடித்துவிட்டு கார் அல்லது பைக் ஓட்டுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போதையில் வேகமாக கார் ஓட்டுவதால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து காவலர்களால் எல்லோரையும் பிடிக்கமுடிவதில்லை, இதனை கட்டுப்படுத்தவும் முடிவதில்லை. சமீபத்தில் கூட ஐஷ்வர்யா என்ற பெண் தன்னுடைய ஆடி காரை ஏற்றி துப்புரவு தொழிலாளர் ஒருவரை கொலை செய்தார். நடிகர் அருண் விஜய் குடித்துவிட்டு கார் ஓட்டி காவல்துறையினர் வாகனத்தில் இடித்தார்.
Samayam Tamil liquor drinkers association introduced new plan for drinkers
குடித்தபிறகு காரில் இலவசமாக வீட்டிற்கு செல்லலாம்! புதிய திட்டம் அறிமுகம்!!


இவ்வாறு நடப்பதை தடுப்பதற்காக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மது அருந்துபவர்கள் முதலில் இவர்களின் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும். மது குடிப்பவர்கள் உபயோகிக்கும் காரின் எண், மாடல், மது குடிக்க செல்லும் நேரம் மற்றும் வெளியே வரும் ஆகியவற்றை பதிவு செய்துவிடவேண்டும். மது போதையில் காரை செலுத்த இயலாது என்று நினைப்பவர்கள் இவர்களை அழைத்தால் முன் கூட்டியே பாருக்கு சென்று காத்திருந்து டிரைவர்கள் அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டுவிடுவார்கள்.

அதிகரித்து வரும் விபத்துகளை தடுப்பதற்காக இந்த திட்டத்தை தொடங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் பி.செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் வருகின்ற தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது. நட்சத்திர ஹோட்டல் மற்றும் பார்களுக்கு செல்பவர்கள் இந்த திட்டத்தில் சேருவார்களா என்பது கேள்வியாக உள்ளது.

அடுத்த செய்தி