ஆப்நகரம்

தீபாவளி, தசரா பண்டிகைகளை முன்னிட்டு பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில்கள்..! முழு விவரம்

தசரா (நவராத்திரி) மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இயங்கவுள்ள ரயில்களின் விவரங்களை தேதி வாரியாக பார்க்கலாம். இந்த பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 20.10.2020 காலை 8 மணிக்கு துவங்கும்.

Samayam Tamil 20 Oct 2020, 12:09 pm
பெங்களூரு மற்றும் மைசூரில் இருந்து தமிழகத்திற்கு (சென்னை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி) ஆறு இரட்டை பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்.
Samayam Tamil list of special trains from bangalore to chennai for deepavali and dussehra festival
தீபாவளி, தசரா பண்டிகைகளை முன்னிட்டு பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில்கள்..! முழு விவரம்


​சென்னை - பெங்களூரு - சென்னை

அக்டோபர் 23ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை இந்த விரைவு ரயில் இயங்கும் : வண்டி எண் 02607 சென்னை - பெங்களூரு சிறப்பு அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

அக்டோபர் 23ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை இந்த விரைவு ரயில் இயங்கும்: வண்டி எண் 02608 பெங்களூரு - சென்னை சிறப்பு அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

​இரவு நேரம்

அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும். வண்டி எண் 02657 சென்னை - பெங்களூரு சிறப்பு அதிவிரைவு வண்டி (இரவு நேரம்)

அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும். வண்டி எண் 02658 பெங்களூரு - சென்னை சிறப்பு அதிவிரைவு வண்டி (இரவு நேரம்)

​நாளை முதல்

அக்டோபர் 21.10.2020 முதல் இந்த சிறப்பு ரயில் சென்னையிலிருந்து இயங்கும். வண்டி எண் 06075 சென்னை - பெங்களூரு சிறப்பு இரண்டடுக்கு குளிர்சாதன அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

(பகல் நேரம்)

இந்த சிறப்பு ரயில் நாளை (21.10.2020) முதல் இயக்கப்படுகிறது. வண்டி எண் 02658 பெங்களூரு - சென்னை சிறப்பு இரண்டடுக்கு குளிர்சாதன அதிவிரைவு வண்டி

​மைசூரு - மயிலாடுதுறை - மைசூரு

மேற்கண்ட ஊர்களுக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்து அக்டோபர் 26 முதல் டிசம்பர் 1 வரை இயக்கப்படும். வண்டி எண் 06231 மயிலாடுதுறை - மைசூரு சிறப்பு விரைவு வண்டி.

இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 25 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்படும். வண்டி எண் 06232 மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு விரைவு வண்டி.

​மைசூரு - தூத்துக்குடி - மைசூரு

இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை இயக்கப்படும். வண்டி எண் 06235 தூத்துக்குடி - மைசூரு சிறப்பு விரைவு வண்டி.

அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். வண்டி எண் 06236 மைசூரு - தூத்துக்குடி சிறப்பு விரைவு வண்டி.

​பெங்களூரு - கன்னியாகுமரி - பெங்களூரு

இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 25 முதல் டிசம்பர் 2 வரை இயக்கப்படுகிறது. வண்டி எண் 06525 கன்னியாகுமரி - பெங்களூரு சிறப்பு விரைவு வண்டி.

இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்படுகிறது. வண்டி எண் 06526 பெங்களூரு - கன்னியாகுமரி சிறப்பு அதிவிரைவு வண்டி.

மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 20.10.2020 காலை 8 மணிக்கு துவங்குகிறது.

அடுத்த செய்தி