ஆப்நகரம்

மக்களே உஷார்! மாசா பாக்கெட்டுக்குள் பல்லி!

பல்லி இருந்த மாசாவை குடித்த பள்ளி மாணவி உடல்நலக் குறைவால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 10 Oct 2019, 8:34 am
பாட்டிலில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் உணவு, மற்றும் குளிர்பானங்கள் சீக்கிரம் கெட்டுப்போகக் கூடாது என்பதற்காக சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுவது வழக்கம். இதுவே சில நேரம் உடல்நலத்தை பாதிக்கக்கூடியதாக அமைந்துவிடுகிறது. இது ஒருபுறமிருக்க முழுவதும் அடைக்கப்பட்டுள்ள பாக்கெட்டுகளுக்குள் புழு, பல்லி போன்றவை இருப்பது தொடர் கதையாகிவருகிறது.
Samayam Tamil Untitled collage


உயிரிழந்த ஆட்டின் விலை, ரூ. 2.68 கோடி!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த பால்நாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரத். இவர் தனது உறவினர்களை ஊருக்கு அனுப்புவதற்காக தனது 13வயது மகளுடன் திருப்பத்தூர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த கடையில் மாசா வாங்கி கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறுமி சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பரத் தனது மகளை உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அயன் படத்தை மிஞ்சிய தங்க கடத்தல் சம்பவம்..! ஆனா இது புதுசுங்க..

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உணவில் விஷத்தன்மை இருந்ததாக (Food poison)கூறியுள்ளனர். சந்தேகமடைந்த பரத் தான் வாங்கி கொடுத்த மாசாவை திறந்து பார்த்த போது அதில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி