ஆப்நகரம்

ஐகோர்ட்: “தலித் தொகுதியில் மதம் மாறியவர்கள் போட்டியிட்டால், கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்”

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொகுதியில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும், பிற மதங்களுக்கு மாறியவர்கள் போட்டியிட்டால்...

Samayam Tamil 2 Dec 2019, 7:20 pm
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநிலத்தில் உள்ள கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Samayam Tamil images


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நலத்திட்ட உதவிகள் வழங்க தடை

அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடராக இந்து மதத்தில் அடையாளப்படுத்தப்பட்டவர் வேறு மதத்திற்கு மாறினார். அதன்பின் உள்ளாட்சித் தேர்தலில், ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் மதமாற்றத்திற்கு முன் தான் வைத்திருந்த சாதி சான்றிதழை வைத்துப் போட்டியிட்டார். இந்த முறையைக் கண்காணித்து ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சாதி சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பார்த்துக் கொள்வார்கள். இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுதொடர்பாக தீர்ப்பு வழங்க முடியாது” எனக் கூறி தள்ளுபடி செய்தது.

அதிமுக அரசின் முகத்தில் கரியைப் பூச மக்கள் தயார்: மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் வழக்கமாக இந்த குற்றச்சாட்டு எழுகிறது. இந்த முறை நீதிமன்ற வழிக்காடுதல்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி