ஆப்நகரம்

மதுரையில் மே-10-ல் உள்ளூர் விடுமுறை

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை முன்னிட்டு வருகிற 10-ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

TNN 4 May 2017, 6:22 pm
மதுரை: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை முன்னிட்டு வருகிற 10-ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil local holiday for may 10th in madurai collector announces
மதுரையில் மே-10-ல் உள்ளூர் விடுமுறை


உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க, மதுரை குலுங்க கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.

யானை, குதிரை, ஒட்டகங்கள், மாடு, கோலாட்டம், நாதஸ்வர கலைஞர்கள், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு பரிவாரங்களுடன் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் வீதியுலா வரும் நிகழ்ச்சி என கொடி ஏற்றத்தை தொடர்ந்து, மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மே 5-ம் தேதி இரவு (நாளை) அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவதுடன், அம்மனுக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப்படும். மே 6-ம் தேதி திக்குவிஜயம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற மே 7-ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது.

அதேபோல், மற்றொரு முக்கிய நிகழ்வான உலகபிரசித்தி பெற்ற கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, மதுரை திணறும் அளவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர்.

இந்நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு வருகிற 10-ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
Local holiday for May 10th in Madurai: Collector announces

அடுத்த செய்தி