ஆப்நகரம்

விபத்து மரணத்தை ஜீவசமாதி ஆக்கிய லோக்கல் சாமியார்!

திருவண்ணாமலையைச் சேர்ந்த தன நாராயணன் என்கிற சிறுவன் கால் தடுக்கி ஆற்றில் தவறுதலாக விழுந்துவிட்டான். ஆற்றில் மூழ்கி இறந்து மிதக்கும் வீடியோ வாட்சாப்பில் வைரலானது. சிறுவன் ஜலசமாதி அடைந்தான என வீடியோவுடன் தகவல் பகிரப்பட்டு இருந்தது. என்ன மடத்தனம் இது என பொங்கி எழுந்த நெட்டிசன்கள் கொதித்தனர்.

Samayam Tamil 21 Apr 2019, 12:08 pm
திருவண்ணாமலையைச் சேர்ந்த தன நாராயணன் என்கிற சிறுவன் கால் தடுக்கி ஆற்றில் தவறுதலாக விழுந்துவிட்டான். ஆற்றில் மூழ்கி இறந்து மிதக்கும் வீடியோ வாட்சாப்பில் வைரலானது. சிறுவன் ஜலசமாதி அடைந்தான என வீடியோவுடன் தகவல் பகிரப்பட்டு இருந்தது.
Samayam Tamil boy


என்ன மடத்தனம் இது என பொங்கி எழுந்த நெட்டிசன்கள் கொதித்தனர். கண்டனங்களை பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த விஷயம் காவல்துறை காவனத்துக்குச் செல்ல, காவலர்கள் விரைந்துவந்த உடலை மீண்டனர்.

சிறுவனின் காலில் அடிபட்டிருந்தது. அவன் ஆற்றில் எதிர்பாராமல் விழுந்து இறந்தது தெரிய வந்தது. பழனி என்ற உள்ளூர் சாமியார் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில் அந்த சிறுவன் எட்டு மாதங்களுக்கு முன்னர் தன்னிடம் ஜலசமாதி அடைய வழி கேட்டான். அதற்கு தான் வழி கூறியதாக அவர் தெரிவித்தார். சாமியாரின் அறிவுறையின் பேரிலேயே சிறுவன் ஆற்றில் விழ்ந்து ஜலசமாதி அடைந்தான் எனவும் இவர்களுக்க்கு அமர்ந்த நிலையில் சமாதி மண்டபம் கட்ட வேண்டும் எனவும் சாமியார் தெரிவித்தார். இதனால் சிறுவனின் பெற்றோர் அவ்வாறே செய்தனர்.

காவல்துறையினர் இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி