ஆப்நகரம்

திமுக கேவியட் மனுத் தாக்கல்

உள்ளாட்சி தேர்தல் குறித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TNN 5 Oct 2016, 11:40 am
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil localbodyelections dmk file caveat petition
திமுக கேவியட் மனுத் தாக்கல்


தமிழக உள்ளாட்சி தேர்தல் #LocalBodyElections அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதலே அதில் சர்ச்சைகள் நிலவின. இதனையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்த இந்த அறிவிப்பில், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது பஞ்சாயத்து ராஜ் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பன உள்ளிட்ட பல காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் அட்டவனையை ரத்து செய்ய கோரி திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இதன் மீதான விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. அனாலும், அதிமுக தரப்பில், திமுக-வினர் திட்டமிட்டு இதை செய்கின்றனர் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டால், மனுத் தாக்கல் செய்தவரின் கருத்தை அறிந்த பின்பே வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK file Caveat Petition #LocalBodyElections #DMK #ChennaiHC

அடுத்த செய்தி