ஆப்நகரம்

அடடே, அமலுக்கு வந்தன பொது முடக்கம் தளர்வுகள்!

மாநகராட்சிப் பகுதிகளில் இன்று சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 10 Aug 2020, 8:36 am
கொரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. மார்ச் மாத இறுதியில் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. இந்நிலையில் படிப்படியாக் பொது முடகக்த்தில் தளர்வுகள் அறிவிக்கபப்ட்டுள்ள நிலையில் பல இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil lockdown relaxation


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாதிப்பு குறைவாக உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் படிப்படியாக வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பகுதிகளில் 10,000 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரக்கூடிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன. பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கானா தடை தொடர்ந்து வருகிறது.

மேலும் மாநகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு சனிக்கிழமை அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் 10,000 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரக்கூடிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி (இன்று) முதல் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு அறிவித்த அடுத்தகட்ட தளர்வு: இதற்கெல்லாம் அனுமதி!

அந்த உத்தரவையடுத்து இன்று காலை முதல் சென்னையில் பல இடங்களில் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் நான்கரை மாதங்களுக்கும் மேலாக செல்ல முடியாமல் இருந்த பக்தர்கள் காலையிலேயே கோயில்களுக்கு படையெடுத்தனர்.

சேலம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனிமே ஜாலியா போகலாம்!

கோயில்கள் திறக்கப்பட்டாலும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி