ஆப்நகரம்

அதிமுக அவசர ஆலோசனை!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Samayam Tamil 21 Feb 2019, 7:20 pm
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
Samayam Tamil aiadmk office


வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அதிமுக,பாஜக,பாமக மெகா கூட்டணி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 40 இடங்களில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில், அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது.

இந்நிலையில், இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் தேர்தல் கூட்டணயில் அடுத்தகட்டமாக எந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்த தொகுதியில் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது உள்ளிட்ட தேர்தல் விவகாரம் குறித்து ஆலோசனை நடந்தது. ஏற்கனவே தேமுதிகவுடனான கூட்டணியில் தொகுதி இழுப்பறி நீடிக்கும் நிலையில், அதிமுகவின் அவசர ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி