ஆப்நகரம்

ஜெ.,வுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் மீண்டும் வருகை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் அப்போலோ மருத்துவமனை வந்துள்ளார்.

TNN 23 Oct 2016, 11:55 pm
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் அப்போலோ மருத்துவமனை வந்துள்ளார்.
Samayam Tamil london doctor visit again apollo hospital
ஜெ.,வுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் மீண்டும் வருகை


கடந்த மாதம் 22-ம் தேதி உடல்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.முதல்வருக்கு அப்பல்லோ மருத்துவக் குழு , எம்ய்ஸ் மருத்துவர்கள், லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிக்க்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலை , முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த மாதம் 30-ஆம் தேதி முதன்முறையாக லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்ட் பீலே சென்னை வந்தார். அவரது ஆலோசனைபடி முதல்வருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்காக சென்னையில் தங்கியிருந்த ரிச்சர்ட் பீலே, கடந்த வாரம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனை வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு சிகிச்சை அளித்துவருகிறார்..

அடுத்த செய்தி