ஆப்நகரம்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

போக்குவரத்து அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

TNN 3 Apr 2017, 5:42 pm
சென்னை: போக்குவரத்து அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Samayam Tamil lorry strike withdrawn in tamilnadu after meeting with minsiter
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரத் தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குமாரசாமி, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை பொறுத்தவரை எங்கள் பிரச்னை தீர்ந்துவிட்டது என்றும் கூறினார்.

அதனால் தமிழக அளவில் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், லாரி உரிமையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார். கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது என்றும் தெரிவித்தார். அதனால் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Lorry Strike withdrawn in Tamilnadu after meeting with Minsiter.

அடுத்த செய்தி