ஆப்நகரம்

இந்த ஆட்சியில் வாரியம் அமைய வாய்ப்பில்லை: ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Apr 2018, 3:38 pm
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 124419_sta2.png


திமுக சார்பில் இன்று சென்னையில் அண்ணா சாலையிலிருந்து மெரினா வரை நடைபெற்ற பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஸ்டாலின், திருமா, திருநாவுக்கரசர், வீரமணி உள்ளிட்ட தலைவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் புரசைவாக்கம் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஸ்டாலின், "மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது." என்று கூறினார்.

காவிரிக்காக முழு அடைப்புப் போராட்டம்: முழு விவரம்

"தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி ஆலோசிக்க இன்று மாலை கூட இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்" என்று அறிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் காவிரி மீட்புப் பயணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழக ஆளுநருக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை; அதனால் அவர் தனியே ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் இந்தக் குதிரை பேர ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ப்பில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், ஸ்கீம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவிரிக்காக முழு அடைப்புப் போராட்டம் - விரிவான புகைப்படத் தொகுப்பு

அடுத்த செய்தி