ஆப்நகரம்

மதுராந்தகம் ஏாி நிரம்புவதால் 21 கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சாிக்கை

மதுராந்தகம் ஏாி விரைவாக நிரம்பி வருவதால் அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களை சோ்நத மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாாிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுருத்தியுள்ளனா்.

TOI Contributor 5 Nov 2017, 9:18 am
மதுராந்தகம் ஏாி விரைவாக நிரம்பி வருவதால் அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களை சோ்நத மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாாிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுருத்தியுள்ளனா்.
Samayam Tamil madhuranthagam lake full district administration appeal
மதுராந்தகம் ஏாி நிரம்புவதால் 21 கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சாிக்கை


சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் பருவமழை சீராக பெய்த நிலையில் நீாிநிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பழமையான ஏாியாக கருதப்படுவது மதுராந்தகம் ஏாி. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாசன பகுதிகள், குடிநீா்த் தேவை என பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மதுராந்தகம் ஏரி பயன்படுத்தப்படுகிறது.

மதுராந்தகம் ஏாியின் மொத்த கொள்ளளவான 23.20 அடியில் தற்போது 21 அடிக்கு நீா் நிரம்பியுள்ளது. ஏாிக்கு 5 ஆயிரம் கனஅடி நீா் வரத்து உள்ளதால், ஏாி விரைவில் நிரம்பிவிடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஏரியில் இருந்து கிளியாற்றில் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

இதனையடுத்து கத்திாிச்சோி, விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், முருக்கச்சோி, தச்சூா் உள்ளிட்ட ஏாியின் வலது கரை கிராமங்களுக்கும், மலைப்பாளையம், கருங்குழி, தோட்ட நாவல், மேட்டுக்கலனி, உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏாி முழுவதுமாக நிரம்பிவரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி மாவட்ட நிா்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ள நீா் கிளியாற்றில் செல்லும் நிலையில் அதனை பொதுமக்கள் யாரும் வேடிக்கைப் பாா்க்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி