ஆப்நகரம்

சின்னதம்பி யானையை காயப்படுத்தாமல் பிடிக்க உயா்நீதிமன்றம் அனுமதி

உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை பிடிக்கும் போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோக் கூடாது என்று தமிழக வனத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 13 Feb 2019, 5:49 pm
உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Elephant


கோவை தடாகம் அருகே சுற்றித்திரிந்த சின்னதம்பி யானையை வனத்துறையினா் பிடித்து டாப்ஸ்லிப் பகுதியில் விட்டனா். ஆனால் தடாகம் பகுதியில் பெண் யானை, குட்டி யானை என குடும்பத்துடன் சுற்றித்திரிந்த சின்னதம்பி டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து நூறு கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து தற்போது உடுமலைப்பேட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது.

காட்டு யானையான சின்னதம்பி தற்போது மிகவும் சாதுவாக செயல்படுவதால் அதனை கும்கியாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. ஆனால், அரசின் முடிவுக்கு விலங்குகள் நல ஆா்வா்கள் கடும் எதிா்ப்பு தொிவித்தனா்.

இது தொடா்பாக விலங்குகள் நல ஆா்வலா்கள் முரளிதரன், அருண் பிரசன்னா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். முன்னதாக நடைபெற்ற இந்த வழக்கின் மீதான விசாரணையில், சின்னதம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என்று நீதிமன்றம் தொிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது சின்னதம்பி யானையை தற்போதைக்கு பிடித்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் யானையை பிடிக்கும்போது அதனை துன்புறுத்தவோ, காயப்படுத்தவோக் கூடாது என்று தொிவித்த நீதிபதிகள், யானையை நிரந்தரமாக முகாமில் அடைக்கலாமா அல்லது வனப்பகுதியில் விடலாமா என்று பின்னா் தொிவிக்கப்படும் என்று வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனா்.

அடுத்த செய்தி