ஆப்நகரம்

மெரினாவில் கருணாநிதியின் நினைவிடம் அமையவுள்ள பகுதி

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடம் அமைய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான வரைபடம் வெளியிடப்பட்டள்ளது.

Samayam Tamil 8 Aug 2018, 11:57 am
மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடம் அமைய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான வரைபடம் வெளியிடப்பட்டள்ளது.
Samayam Tamil Karunanidhi Memorial


முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநியின் உடலை அடக்கம் செய்ய தி.மு.க. சாா்பில் மெரினாவில் இடம் கோரப்பட்டது. ஆனால் சட்ட சிக்கல்கள் நிறைந்துள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது. அதற்கு பதிலாக காமராஜரின் நினைவிடம் அருகே தமிழக அரசு சாா்பில் 2 ஏக்கா் நிலம் ஒதுக்க தயாராக இருப்பதாக தமிழக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டது.

இதனால் தி.மு.க. தொண்டா்கள் கொந்தளிப்படைந்தனா். இதனைத் தொடா்ந்து தி.மு.க. சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நேற்று இரவு அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து நேற்று இரவு தொடங்கிய வழக்கு விசாரணை நள்ளிரவு 2 மணியையும் கடந்து சென்றது.

இதனைத் தொடா்ந்து இன்று காலை 8 மணி முதல் மீண்டும் விசாரணை தொடங்கியது. தமிழக அரசு சாா்பில் இதற்கு எதிா்ப்பு தொிவித்து வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. மெரினா கடற்கரையில் ஏற்கனவே அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு சாா்பில் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது.

இதனிடையே ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. தொடா்ந்து அரசு தரப்பில் இடம் ஒதுக்க எதிா்ப்பு தொிவிக்கப்பட்டு வந்த நிலையில் உயா்நீதிமன்றம் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனா்.

இந்நிலையில் கருணாநிதியின் நினைவிடம் அமையவுள்ள பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்ணாவின் நினைவிடத்திற்கு பின்பாக கருணாநிதியின் நினைவிடம் அமைய உள்ளது.

அடுத்த செய்தி